சஹ்ரானை கைது செய்ய முடியாமைக்கான காரணத்தை போட்டுடைத்த ஹேமசிறி!

 


உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை தடுக்க முடியாமற் போனமைக்கான பொறுப்பினை தன்னால் ஏற்க முடியாது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிற ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் 3ஆவது நாளாக இன்று ஆஜராகியுள்ளார்.


இன்றைய வாக்குமூலத்தில் அவர் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது கடும் குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்தார்.


அதாவது தீவிரவாதி ஸஹ்ரான் ஹாசிம் தலைமையிலான கும்பலை கைது செய்ய முடியாமைக்கான காரணம், அதற்கு பின்னால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் அழுத்தம் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.