உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.12 - கோடியாக உயர்வு

 


சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. 

வைரஸ் தொற்று முதன் முதலாக வெளிப்பட்டு சற்றேறக்குறைய 9 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தொற்று பரவல் இன்னும் சில நாடுகளில் உச்சத்தில் உள்ளன. 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனைகள் கட்டத்திலே இருப்பதால், தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. 


உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.12 கோடியாக உயர்ந்துள்ளது. 
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  2.28-கோடியாக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.64-லட்சமாக உள்ளது. 

அமெரிக்காவில்  மேலும்  33,344-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது.  பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.