பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,143 ஆக உயர்ந்த கொரோனா தொற்றுகள்.


இன்று பிரித்தானிய அரசு அறிவித்த தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 7143 புதிய தொற்றுகள் பதிவாகி உளள்து. இன்று பதிவான தொற்றுகளே பிரித்தானிய அரசு மேற்கொண்ட சோதனைகளுக்குப் பின்னர் கண்டறியப்பட்ட மிக அதிகமான தொற்றுகளின் எண்ணிக்கை யாகும். 


தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 4,404 ஆக இருந்தது.  பிரித்தானியாவில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 446,156 ஆக உள்ளது.


கடந்த ஞாயிறு மற்றும் திங்களில் தொற்றுகள் எண்ணிக்கை குறைவாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இன்று தொற்றுகளின் எண்ணிக்கை வெகுவிரைவாக அதிகரித்து உள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றது.


இறப்புகளை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றி  28 நாட்களுக்குள் மேலும் 71பேர் பலியாகினர். இந்த எண்ணிக்கையையும் சேர்த்து கொரோனா வைரஸ் தாக்கி 28 நாட்களுக்குள் மொத்தம்  42,072 பேர் இறந்ததாகப் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.


பிரித்தானிய அரசின் தரவுகள் ஒருவர் கொரோனா தொற்றி 28 நாட்களில் இறந்தால் மட்டுமே அவர் கொரோனா தாக்கி இறந்ததாகக் கணக்கில் கொள்கிறது. இதன் காரணமாக உண்மையில் கொரோனா தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.


கோவிட் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது  ஒவ்வொரு எட்டு நாட்களுக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவாளோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது என்று பிரித்தானிய சுகாதார அமைச்சர் சென்ற வாரம் தெரிவித்து இருந்தார்.  இன்று அரசு அறிவித்த தகவலின் படி மொத்தம் 2,049 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை நேற்று 1,727 ஆக இருந்தது.


இவர்களிள் 297 பேர் சுவாசக்கருவி பொருத்திய  படுக்கையில் உளளர்கள். இந்த எண்ணிக்கை நேற்று 262  என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று மட்டும் புதிதாக 266 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இன்றய தரவுகளையும் சேர்த்து மொத்தம் 138,361 பேர் இதுவரை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு உளளர்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.