பத்திரிகை ஸ்தாபன சட்டத்தை மீளாய்வு செய்ய திட்டம்!

 

தற்போதைய உலகளவில் உள்ள ஊடகங்களின் போக்குகள் மற்றும் தளங்களை உள்ளடக்குவதற்கான திருத்தங்களை செய்வதற்காக இலங்கையின் பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுடனான சந்திப்பின்போது பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

Blogger இயக்குவது.