சீனா, ஜேர்மனியிடமிருந்து முக்கிய இறக்குமதிக்கு தடை விதித்தது!

 


ஜேர்மனியில் இருந்து பன்றி இறைச்சி மற்றும் பன்றி தொடர்பான பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.


இந்த தடையை சீனாவின் சுங்க நிறுவனம் மற்றும் அதன் விவசாய அமைச்சகம் ஆகியன இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளன.


கடந்த வாரம் காட்டுப் பன்றியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதை ஐரோப்பிய நாடான ஜேர்மனி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக சீனா குறிப்பிட்டுள்ளது.


கொடிய பன்றி நோய்க்கு எதிராக போராட வேண்டியுள்ள நிலையில், சீனாவுக்கான மூன்றாவது பெரிய பன்றி இறைச்சி வழங்குநரான ஜேர்மனியிமிருந்து பன்றி குறித்த இறக்குமதியை சீனா தடை செய்துள்ளது.


இந்தத் தடை யை ஏனைய நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில், அமெரிக்கா, ஸ்பெயின், கனடா மற்றும் பிரேசில் போன்ற ஏனைய பன்றி குறித்த பொருட்கள் வழங்குநர்களுக்கு இது பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதேவேளை, 2020 ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் ஜேர்மனி 424 மில்லியன் யூரோ (501.6 மில்லியன் டொலர்) மதிப்புள்ள ஒரு இலட்சத்து 58 ஆயிரம் தொன் பன்றி இறைச்சியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தின் இறக்குமதியின்  இரு மடங்காகும் என ஜேர்மனியின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.