சற்றுமுன் மேலும் 124 பேருக்கு கொரோனா!

 கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் மேலும் 124 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (06) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இன்று மட்டும் 739 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 4,252 ஆகும்.


Blogger இயக்குவது.