பொலிஸ் புலனாய்வு அதிகாரி என்ற போர்வையில் பண மோசடி செய்தவர் கைது!

 பொலிஸ் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரியாகத் தன்னை காட்டி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குருணாகல் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வெள்ளிக்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குருணாகல் நகர்ப்பகுதியில் வைத்து  பொலிஸார் சந்தேகத்திற்கிடமான ஜீப்பொன்றை மடக்கி அதன் சாரதியை கைது செய்தனர். சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது பொலிஸ் சீருடையில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நெல்லிய - மினுவங்கெட்டே பகுதியைச் சேர்ந்த 47 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.