12 வயது சிறுவனை சித்திரவதை செய்த அரக்கன்!

 பிரித்தானியாவில் சலவை திராவகம் கலந்த பானத்தை குடித்த 12 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

மேற்கு சசெக்ஸ், கிராலி பகுதியை சேர்ந்த 12 வயது ரோனி பிலிப்ஸ் என்பவருக்கே சலவை திராவகம் கலந்த பானம் குடிக்கக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட சிறுவன் ரோனி பிலிப்ஸ் தமது 11 சகோதரனுடன், அக்டோபர் 9 ஆம் திகதி தாயார் தூக்கத்தில் இருந்த வேளை குடியிருப்புக்கு வெளியே சென்றுள்ளார்.

குறித்த சிறுவர்கள் இருவரும் இவர்களைவிட வயது முதிர்ந்த ஒரு கும்பலை சந்தித்துள்ளனர். அவர்களே சிறுவன் ரோனிக்கு சலவை திராவகம் கலந்த பானத்தை குடிக்கக்கொடுத்துள்ளனர்.

முதலில் அது மதுபானம் என்றே ரோனியின் தாயார் நம்பியுள்ளார். இருப்பினும் என்ன பொருள் கலக்கப்பட்டது என்பதில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ரோனியின் குடும்பத்தினர் அது சலவை திராவகமாக இருக்கலாம் என நம்புகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பானம் குடித்த ரோனி சாலையில் சுருண்டு விழவும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. மேலும், காலையில் பொலிசார் அவர்களை கைது செய்யும் வரையில் அவர்கள் குடியிருப்புக்கு செல்லாமல் வெளியே பதுங்கியதாகவும் ரோனியின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

ரோனியுடன் வெளியே சென்றிருந்த சகோதரன் ஜிம்மி, தமது சகோதரன் சுருண்டு விழுந்ததும், இறந்ததாகவே கருதியுள்ளான். பின்னர் உதவி கேட்டு அலறியுள்ளான்.

இதனிடையே, சிறுவர்கள் இருவரை வழியருகே காண நேர்ந்த பெண்மணி ஒருவர் அவர்களுக்கு உதவியுள்ளார்.

இதனையடுத்து சிறுவன் ரோனியை மீட்ட அவசர உதவிக்குழுவினர் லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது அவர் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும், கூடிய விரைவில் குடியிருப்புக்கு திரும்புவார் எனவும் தாயார் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.