மாகந்துரே மதுஸ் சுட்டுக்கொலை!கொழும்பு – மாளிகாவத்தை கட்டிடத் தொகுதியில் இன்று (20) காலை பொலிஸாருக்கும் பாதாள குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பாதாளகுழு தலைவர் மாகந்துரே மதுஸ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

விக்கமறியல் கைதியாக இருக்கும் மாகந்துரே மதுஸை ஹெரோயின் மறைத்து வைத்துள்ள இடம் தொடர்பில் கண்டறிய பொலிஸார் அழைந்து சென்ற போது அங்கு துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாகந்துரே மதுஸ் கொல்லப்பட, கொழும்பு சிஐடி அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர்.

அத்துடன் சம்பவ இடத்தில் 22 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

Blogger இயக்குவது.