வருமானம் இழந்தோருக்கு 5 ஆயிரம் வழங்கும் செயற்திட்டம்!கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானம் இழந்தோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கும் செயற்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் முதற்கட்டமாக இன்று முதல் மினுவாங்கொடை – திவுவலபிட்டி, அத்தனகல்ல மற்றும் மீரிகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 72 ஆயிரத்து 345 பேருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானத்தை இழந்தோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Blogger இயக்குவது.