புசிதோவும் (Bushido) புலிகளும்..!!


நவீன சப்பானை உருவாக்கியதில் உருவாக்கிக்கொண்டிருப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது புசிதோ (Bushido)  என்ற தத்துவம். சப்பானிய சாமுராய்கள் வீரத்திற்கு என்று ஒரு அறத்தை உருவாக்கி அதன்படி வாழ்ந்தனர். இவ்வறத்தை தத்துவப்படுத்தி "புசிதோ" என்று ஒரு நூலாக முதன்முதலில் நிதோபே 1900-இல் வெளியிட்டார்.  இந்நூல் உலகளவில் புகழ்பெற்றது. இதுவரை நூறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அன்றைய அமெரிக்க அதிபர் ரூசவெல்டு 60 பிரதிகளை வாங்கி நண்பர்களுக்கு பரிசளித்தார்.

சப்பானில் புசிதோவின் தாக்கம் அளப்பரியது.


1. 1930-இல் புசிதோ பள்ளிகளில் பாடமாக்கப்பட்டு, ஒரு போர்க்குணம் கொண்ட சமூகம் வளர்த்தெடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் சப்பானியர்களின் மூர்க்கமான போர்க்குணத்தை உருவாக்கியது புசிதோதான்.


2. இரண்டாம் உலகப்போரின் பின்னர் போரின் விளைவுகளால் மனம் மாறியவர்கள் போர்க்குணத்தை கைவிட்டனர், ஆனால் புசிதோவைக் கைவிடவில்லை. அக்குணத்தை பொருளாதரத்தை மேம்படுத்துவதில் செலுத்தி முன்னேறினார்கள். ஓர் அறிவார்ந்த சப்பானியரை உற்றுநோக்கினால் அவருக்குள் ஒரு சாமுராய் தோன்றுவார் என்றார் நிதோபே.


Bushido entered the education system and became increasingly involved in a military and nationalistic discourse. World War II then takes its toll; yet, within a few years, bushido returns.. The Japanese economic miracle spurred on the ideals of a bushido-like loyalty to one’s company, with the samurai realized once again as the epitome of that virtue.


அடிப்படையில் ஒரு சமூகம் எதுமாதிரியான  அறத்தை எடுத்துக்கொள்கிறதோ, அதுதான் அவர்களின் எதிர்காலப்பாதையை தீர்மானிக்கிறது. ஆனால் ஒரு சமூகம் தனது விருப்பப்படி எதை வேண்டுமானாலும் அறமாக எடுத்துக்கொள்ள முடியாது. அது அவர்களின் வரலாற்று மரபாக வரும்பொழுதே மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். புசிதோ என்பது என்பது அவர்களின் மரபு, சப்பானியர்களின் ஓர் சமூக ஆயுதம். காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப அது வெவ்வேறு வடிவமெடுக்கும்.


இன்றையத் தமிழ்ச்சமூகம் தனது உரிமைகளை இழந்து வருகிறது, தனது மொழி பண்பாடு நிலம் ஆகியவற்றை பறிகொடுத்து வருகிறது. நாம் ஏன் இவற்றை உறுதியாக எதிர்க்க முடியவில்லை, (குறிப்பாகத் தமிழகத்தில்) என்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது நமது இன்றைய அறம் (அறமற்ற தன்மை) காரணம் என்று கூறலாம். புலிகளால் ஏன் கடுமையாக எதிர்க்க முடிந்தது என்றால், அதற்குக் காரணம் அவர்களின் அறம்.


புலிகளின் அறம் என்ன என்பது இன்னும் ஆராயப்படாதது. புசிதோவைப் படித்ததில் இருந்து நான் உணர்வது என்னவென்றால், புலிகளின் அறமும் புசிதோவும் 75% ஒத்துப்போகிறது. எங்கு வேறுபாடுகிறார்களோ, அது பெரும்பாலும் புசிதோவைவிட பல வகைகளில் இன்றைய நவீன உலகுக்கு ஏற்றவகையில் முன்னேற்றமாகவே தெரிகிறது. புசிதோவின் சில முக்கிய கருத்துக்களை வைக்கிறேன். அதை புலிகளுடன் நீங்களே ஒப்பிட்டுக்கொள்ளலாம்.


1. The Way of the Samurai is found in death.

பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான். – பிரபாகரன்


2. Rectitude is the power of deciding upon a certain course of conduct in accordance with reason, without wavering;—to die when it is right to die, to strike when to strike is right. "Rectitude is the bone that gives firmness and stature. As without bones the head cannot rest on the top of the spine, nor hands move nor feet stand, so without rectitude neither talent nor learning can make of a human frame a samurai. With it the lack of accomplishments is as nothing."

3. "Perceiving what is right," he says, "and doing it not, argues lack of courage."  "Courage is doing what is right."

4. politeness and honesty were also held to the highest degree among samurai, and were certainly important within the concept of bushido. In the true way of bushido there was no love for one who was hot headed and got into arguments easily with others.

5. Simplicity in speech and conversation were always considered values and they should be sought over pointless arguing.

The essentials of speaking are in not speaking at all. If you think that you can finish something without speaking, finish it without saying a single word. If there is something that cannot be accomplished without speaking, one should speak with few words, in a way that will accord well with reason

6. Valued honesty and abhorred lying. “Lying and equivocation were deemed equally cowardly.”

7. samurai praised action, and someone was only as good as their actions showed them to be. “scholars and their like are men who with wit and speech hide their own true cowardice and greed.

8. A samurai is to show an unbeatable determination in order to achieve his goals.

9. the samurai can achieve anything if only he wills it. No matter what it is, there is nothing that cannot be done. If one manifests the determination, he can move heaven and earth as he pleases. But because man is pluckless, he cannot set his mind to it.

10. The Way of the Samurai is in desperateness. Ten men or more cannot kill such a man. Common sense will not accomplish great things. Simply become insane and desperate.

11. loyalty for a samurai is not some sort of mindless slavery, but rather a loyalty based on honor and proper relations between individuals

12. obedience is not blind for the samurai.. it is a virtue itself and is based upon compassion.

13. If living an honorable life was important to the samurai way of life, it can easily be argued that an honorable death was as important if not more important.

14. a warrior who is not ready to die, will admittedly not be the perfect warrior. “If a warrior is not unattached to life and death, he will be of no use whatsoever.” and “With such nonattachment one can accomplish any feat.”


புலிகளின் அறம் எங்கிருந்து வந்தது? இவற்றின் வேர்களை ஓரளவு பண்டைய சங்க இலக்கியங்களில் காணலாம். இவற்றை எல்லாம் ஆராய்ந்து தத்துவப்படுத்துவது முக்கியமானது. இது நமது வரலாறு, மரபு, நமது ஆயுதம், ஒரு வாழ்க்கை நெறி. அது எவ்வாறு எதிர்காலத்தில் தென்படும்/வெளிப்படடும் என்பதை காலம் தீர்மானிக்கும். ஆனால் இவற்றை எல்லாம் தத்துவப்படுத்துவது இன்றைய தேவை, நமது கடமை.

தரவுகள்:


1. Nitobe, Inazō. Bushido: the soul of Japan. Teibi publishing company, 1911.

2. Mather, Grant. "Reminiscence: Bushido in Modern Japan." (2013).

3. Yamamoto, Tsunetomo. The Hagakure-The Way of the Samurai. BoD–Books on Demand, 2001.

4. Turnbull, book review of Benesch, Oleg. Inventing the Way of the Samurai: Nationalism, Internationalism, and Bushidō in Modern Japan. OUP Oxford, 2014.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.