யாழில் இராணுவ உயரதிகாரி தாக்கியதில் சிப்பாய் படுகாயம்!

 


யாழ் நகரில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவ உயரதிகாரி தாக்கியதில் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் உயர் அதிகாரி ஒருவர் அதே இராணுவ முகாமில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவருக்கு நேற்று(20)கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனால் அவரது செவிப்பறையில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.