கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 4042 பேருக்கு தொற்று!

 கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 42 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொரோனாவால் கனடாவில், இதுவரை 9 ஆயிரத்து 654 பேர் உயிரிழந்துள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.