ஊடகவியலாளர் மீதான தாக்குதலை சேனாதிராஜாவும் கண்டித்தார்!

 முல்லைத்தீவில் மரக்கடத்தல் கும்பலால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (13) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,

“நாட்டில் இடம்பெறும் கொள்ளை முயற்சிகளைத் தடைசெய்வதுடன், ஊடகவியலாளர்களினதும் ஊடகத் துறையினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணமும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டுமெனவும்” தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.