3 ஆண்டுகளில் செய்வதற்கு பல பணிகள் உண்டு- நியூஸிலாந்து பிரதமர்!
நியூஸிலாந்தில் இரண்டாவது முறையாக பிரதமராகவுள்ள ஜெசிந்தா ஆர்டெர்ன், அடுத்த 3 ஆண்டுகளில் செய்வதற்கு பல பணிகள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒக்லாந்தில் ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய ஜெசிந்தா ஆர்டெர்ன், ‘பிரிவினை அதிகரித்துள்ள உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். எதிர்கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை மக்கள் இழந்துள்ளனனர். ஆனால் இந்நாட்டு மக்கள் அந்த மனநிலையை கொண்டவர்கள் அல்ல என்பதை தேர்தல் மூலம் காண்பித்துள்ளனர்.
இது சாதாரண தேர்தல் அல்ல. அசாதாரண நேரத்தில் பதற்றத்துடன் நடைபெற்ற தேர்தல். இதில் வெற்றி கிடைத்துள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் செய்வதற்கு பல பணிகள் காத்திருக்கின்றன. கொவிட்-19 பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை களைவதற்கும் எனது அதிகாரத்தை பயன்படுத்துவேன்’ என்று கூறினார்.
சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில், இதில் நியூஸிலாந்து தொழிலாளர் கட்சிக்கும், நியூஸிலாந்து தேசிய கட்சிக்கும் பிரதான போட்டி நிலவியது. வாக்குப் பதிவு முடிந்து மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டதில், ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி 49 சதவீதம் வாக்குகளை பெற்றன. எதிர்க்கட்சியான தேசிய கட்சி 27சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது. தொழிலாளர் கட்சியுடன் கூட்டணி அமைத்த பசுமைக்கட்சி 7.5 சதவீத வாக்குகளை பெற்றது.
நியூஸிலாந்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு விகிதாசார தேர்தல் முறை அமுலுக்கு வந்தது. அதன் பிறகு அந்நாட்டில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஒரு கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது இதுவே முதல் முறை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை