ஆம்புலன்சில் தேர்வு எழுதிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவன்!

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆம்புலன்சில் தேர்வு எழுதினார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அர்ப்போகரா பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் திருநாக்கரா பகுதியில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். அவரது படிப்பிற்கான இறுதி தேர்வுகள் தொடங்கியது. தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அந்த மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து கொரோனா சிகிச்சை மையத்தில் மாணவர் சேர்க்கப்பட்டார். இதனால் அவர் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அவர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்ததையடுத்து அவரை ஆம்புலன்சில் வைத்து தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.Blogger இயக்குவது.