தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா இல்லையாம்!
மூதூர் – கல்கந்த தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்றுறுதியான பெண்ணின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பெண் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் எனவும் இவருக்கு கொரோனா தொற்றுறுதியாகவில்லை எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை