நாட்டின் தற்போதைய ஊரடங்கு நிலவரம்!

 உடனடியாக அமுலாகும் வகையில் கம்பஹா மாவட்டத்தின் 18 காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வீரகுல, வெலிவேரிய, பல்லேவெல, யக்கல ஆகிய காவற்துறை அதிகாரங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


Blogger இயக்குவது.