சிலியில் வன்முறையாக மாறிய நிகழ்வின் அவலம்!!
நாட்டை உலுக்கிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்த, எதிர்ப்பு இயக்கத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும், முதலாமாண்டு நிறைவு நிகழ்ச்சி, தென் அமெரிக்க நாடான சிலியில், வன்முறையாக மாறியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய சாண்டியாகோ சதுக்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடியிருந்ததால் இரண்டு தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
தீயணைப்பு படையினர் வருவதற்குள் தேவாலயம் முற்றிலும் எரிந்து நாசமானது. தேவாலயத்திற்கு போராட்டக்காரர்கள் நெருப்பு வைத்தனரா என விசாரணை நடந்து வருகிறது.
இதன்போது பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு நெருப்பு வைத்ததால் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை வீசியும் விரட்டியடிக்கப்பட்டனர்.
சர்வாதிகார கால அரசியலமைப்பை மாற்றலாமா என்பது குறித்த வாக்கெடுப்பில் சிலி வாக்களிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த ஆர்ப்பாட்டம் பதிவாகியுள்ளது. இது ஒக்டோபர் 18, 2019ஆம் ஆண்டு எதிர்ப்பு இயக்கம் தொடங்கியபோது முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.
நாட்டின் தலைநகரில் உள்ள பிளாசா இத்தாலியாவில் எதிர்ப்பாளர்கள் கூடியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் காலை பெருமளவில் அமைதியாகவே நடைபெற்ற போதும், பிற்பகலில் பல வன்முறை, கொள்ளை மற்றும் காழ்ப்புணர்ச்சி சம்பவங்கள் நடந்தன.
நாடு முழுவதும் சுகாதாரம், கல்வி முறைகளில் சீர்திருத்தம் வேண்டி கடந்த ஆண்டு வெடித்த போராட்டத்தின் போது, 30பேர் உயிரிழந்ததோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை