கிராமிய பொருளாதாரமும் முக்கிய கவனமும்!

 தேசிய பொருளாதார அபிவிருத்தியை போன்றே கிராமிய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவது தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியள்ளதாகவும் இதற்காக  புதிய வேலைத்திட்டத்தை செயற்படுத்தல் குறித்து அரசாங்கம் ஆலோசித்துள்ளதாகவும்  பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டமானது அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக செயற்படுத்தப்பட உள்ளதுடன்  இதன் மூலம் அமைச்சர்கள் குழுவாக செயற்பட்டு கிராம மக்களின் பிரச்சினைகளை நேரடியாக தலையிட்டு தீர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டமானது பிரதானமாக நான்கு  துறைகளின் கீழ் செயற்படுத்தப்பட உள்ளது.

1.       சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு

2.       வாழ்வாதார மேம்பாட்டு குழு

3.       உள்நாட்டு உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்தி குழு

4.       கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு

இது குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரதானமாக நான்கு  துறைகளின்  நான்கு குழுக்களின் மூலம் நாடளாவிய ரீதியில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் போது மாகாண மட்ட, மாவட்ட மட்ட, பிரதேச மட்ட மற்றும் கிராமிய மட்ட அமைச்சுக்களில் வேலைத்திட்டங்களை தயார்ப்படுத்தி கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலான விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பிரதான நான்கு குழுக்களில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர்கள் ஆகியோர் உள்ளடங்குவதுடன், அந்தந்த மாகாணங்களின், மாவட்டங்களின், பிரதேச அரசியல் தலைவர்கள் மற்றும் பிரதேச மற்றும் கிராம மட்டத்திலான அரச அதிகாரிகள் உள்ளடங்குவர்.

இந்த தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களை தெளிவூட்டும் வகையில் 2020.10.16 அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாவது, 

கடந்த தேர்தல்களின் போது சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்வைத்த கிராம மட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட அமைப்பொன்றை உருவாக்குதல் தொடர்பான முன்மொழிவை நிறைவேற்றுவதற்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை திறம்பட பயன்படுத்தக்கூடிய வகையில் செயற்படுதல் இந்த தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழுக்கள் மாவட்ட மட்டத்தில் ஒன்றுகூடும் சந்தர்ப்பத்தில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் பிரதேச அதிகாரிகள் ஆகியோரை அதில் இணைத்து கொள்வதன் மூலம் திட்டங்களை மிகவும் திறமையாக தொடங்க முடியும் என்று நம்பப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கேற்ப பிரதமர் அலுவலகத்தின் கீழ் இந்த வேலைத்திட்டத்தை ஒருங்கிணைப்பதன் ஊடாக கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அரசாங்க அதிகாரிகளை திறம்பட ஈடுபடுத்திக் கொள்வதற்கு இதன் மூலமாக எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.