உச்சம் தொடுகிறது கொரோனா – கொழும்பில் மறைந்திருக்கும் பெருமளவு கொரோனா நோயாளிகள்? அடுத்து நடக்கப்போவது என்ன?

 சர்ச்சைக்குரிய மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய பலர் கொழும்பில் ஒளிந்திருப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருந்தும் தற்போது விலாசத்தை மாற்றி மறைந்திருக்கும் பிரென்டிக்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள் உடனடியாக தன்னார்வாக முன்வந்து தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு இராணுவ தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேல் மாகாணத்திற்கு வெளியே சென்று இருக்கும் ஊழியர்கள் 495 பேர் வரையில் உரிய முகவரியில் இல்லை எனவும், கொழும்பின் ஏனைய பிரதேசங்களில் அவர்கள் மறைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Blogger இயக்குவது.