மலரின் வண்டு நான்....கவிதை!!
இதமான காற்றில்
என் இதயத்தை வருடும்
வாசம் ஒன்றை உணர்ந்தேன்.
உணர்ந்த மறுகணமே
காற்றுக்கு எதிராக
வாசத்தின் உறைவிடம் தேடி
சிறகுகளை அடித்து பறந்தேன்..
வாசத்தின் உறைவிடம் சென்றதும்
உருக்குலைந்து போனேன்...
என் கறுப்பு நிற தேகத்திற்கு
எதிரான வெண்மை நிற மலரது..
என்னைக் கண்டதும்
அச்சத்தில் இதழ்களை
இதமாக மூட முயன்றது.
''மூடாதே மூடாதே,
உன் மூச்சின் சுவாசத்தை
மூச்சு முட்ட
சுவாசித்த பின்புதான்
உனை தேடி வந்தேன்,
அச்சம் கொள்ளாதே.
உன் அழகில் அடிமையானேன்
உன் ஆயுள் வரை
உன் அருகிலேயே இருப்பேன்"
என்று சொன்னேன்..
மறுகணமே
மலரும் காதலில் விழுந்தது
நான் மலரில் அமர்ந்து
அதன் மடியில் தவழ்ந்து
ஆசையில் தேனும் பருகி
மலரோடு சில நொடிகள்
வாழ்ந்தேன்..
யார் கண் பட்டதோ ,
ஒருவன் வந்து
மலரைப் பறித்து
பிரிவு ஒன்று தந்தான்...
அவன் பறித்த
என் மலரின் பின்னாலே
நான் திரிந்தேன்..
மலரோ,
மணமேடை ஏறி
மலர் மாலையாகி
மணமகளை
அலங்கரித்துக் கொண்டிருந்தது..
நான் காத்திருந்து ...காத்திருந்து
என்னவள்
கசங்கிய பின்தான்
கண்டெடுத்தேன்.
உன் ஆயுள் வரை மட்டும்
உன் கூடவே வரவில்லை
உன் ஆயுள் முடிந்தாலும்
உன் கூடவே வருவேன்
என்று உயிரை மாய்த்த
வண்டு நான்...
கற்பனை திருடன்....
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை