சம்சுங் நிறுவன லீ குன் ஹீ காலமானார்!!

 


தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான சம்சுங் நிறுவனத்தை தொழில்நுட்ப உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்த்தெடுத்த லீ குன் ஹீ, தனது 78வது வயதில் காலமானார்.


1987ல் சிறிய தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட சம்சுங், லீயின் கடின முயற்சியால் அடுத்த சில ஆண்டுகளில் பாரிய வளர்ச்சியை எட்டியது.


மொபைல்போன் தயாரிப்பு துறையிலும் கால்பதித்த சம்சுங் நிறுவனம், நொக்கியா, அப்பிள், சொனி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி உலகளாவிய சந்தையில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியது.


இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட லீ, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளதாக சம்சுங் குழுமம் தெரிவித்துள்ளது.


1938 ஆம் ஆண்டில் சம்சுங் குழுமத்தை நிறுவிய லீ பைங்-சுலின் மூன்றாவது மகன் லீ குன் ஹீ ஆவார். அவர் 1968 இல் குடும்ப நிறுவனத்தில் சேர்ந்ததுடன் 1987 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தலைவராக பொறுப்பேற்றார்.


அந்த நேரத்தில், சம்சுங் மலிவான, குறைந்த தரமான தயாரிப்புகளின் தயாரிப்பாளராகக் காணப்பட்டது. ஆனால் அவரது தலைமையின் கீழ் நிறுவனத்தில் தீவிர சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.