'ஆயூ' என்ற பெயரில் புற்றுநோய் விழிப்புணர்வு

 மக்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் 'ஆயூ' என்ற பெயரில் சமூக வலைத்தளங்களின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயை முன்கூட்டியே இனங்காணல், அதற்கு முறையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளல், புற்றுநோய் வருவதைத் தடுக்கக்கூடிய வகையில் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் செயற்படல் உள்ளடங்கலாக மக்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் 'ஆயு 10' என்ற சமூகவலைத்தளங்களின் மூலமான விழிப்புணர்வு செயற்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இரத்தவங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

அதன்படி 'ஆயூ' என்ற பெயரில் பேஸ்புக், இன்ஸ்டகிராம், யூடியூப் ஆகியவற்றில் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன் 'ஆயூ' என்ற பெயரில் இணையப்பக்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் வாயிலாக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயற்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.