கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியொருவருக்கு கொரோனா

 கொழும்பு தேசிய வைத்தியசாலையில இணைக்கப்பட்ட ஒரு தாதியர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அவரது பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு விடுதியில் இணைக்கப்பட்ட தாதியொருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

மத்துகமவில் வசிக்கும் குறித்த தாதிப் பெண் தற்போது களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் பாதிக்கப்பட்ட தாதியுடன் தொடர்புகளை பேணிய வைத்தியசாலை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனை முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன. 
Blogger இயக்குவது.