சபாநாயகரின் முகக்கவசம் எங்கே? - சபையில் சஜித்!

 


சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் என பாராளுமன்றத்தில் கூறிக்கொண்டு சபாநாயகரே முகக்கவசம் இல்லாது சபையை வழிநடத்துகின்றார், சபாநாயகர் சபைக்கு தவறான எடுத்துக்காட்டென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டை  முன்வைத்ததுடன், உடனடியாக பாராளுமன்றத்தில் ஒத்திவைத்துவிட்டு சுகாதார வழிமுறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

எதிர்க்கட்சி தலைவரின்  கோரிக்கைக்கு பதில் தெரிவித்த சபாநாயகர் இரண்டாம் உலக யுத்தத்தில் குண்டு மழைகள்  பொழிந்துகொண்டு இருந்த நேரத்தில் கூட பாராளுமன்றம் கூடியது, இப்போது எவ்வாறு பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பது என்றும் கூறினார்.

Blogger இயக்குவது.