இந்தியா போன்று மிகவும் ஆபத்தான நிலைமை இலங்கைக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் – வைத்தியர்கள் பகீர் எச்சரிக்கை

 இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எங்குள்ளார்கள் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் அவதானமாக செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியா போன்று இலங்கையிலும் நோயாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அர்ப்பணிப்பு மேற்கொண்டமையினால் தன்னை அமைதியாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அந்த பதவியை தான் ஏற்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார். எனினும் பதவியின்றி மக்களை காப்பாற்ற தன்னால் முடிந்தவற்றை செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.