சுழிபுரம் இரட்டைக்கொலையில் ஒரு பெண் தொடர்புபட்டுள்ளார் என சந்தேகம்!


யாழ் சுழிபுரம் இரட்டைப் படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல காலமாக கசிப்பு உற்பத்தியின் கோட்டையாக இயங்கிவரும் சுழிபுரம் குடாக்கனை கிராமத்தில் தற்பொழுது நாடாளுமன்றம் சென்றுள்ள அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவாளர் ஒருவர் கசிப்பு விற்பனைக்கு ஆதரவளித்து வருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கொல்லப்பட்ட ஒருவரின் மூத்த மகளை கசிப்பு வியாபாரத்தில் கொடிகட்டிப்பறக்கும் ஒருவர் திருமணம் செய்த நிலையில் அதன்பின்னர் மனைவி கர்பமானபோது, தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் மனைவியின் தங்கையான 18 வயதான யுவதியுடன் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து தலைமறைவானவரின் உறவினர்களுக்கும் , கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இது தொடர்பில் அடிக்கடி வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தலைமறைவானவரின் உறவினர் ஒருவர் வாக்குவாத்தை சமரசமாக்க முயன்றபோது, கொலையானவர் தரப்பில் இருந்த ஒருவர் அவரை கீழே தள்ளியுள்ளார்.

இதன்போது நோயாளியான குறித்த நபர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்தே இரு தரப்பு மோதலும் உக்கிரமடைந்ததாகவும், இதன் அடிப்படையிலேயே குறித்த கொலைகள் இடம்பெற்றதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த பகுதியில் கசிப்புக்காச்சும் கும்பலொன்று தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபடுவதாகவும், இது தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை அச்சுறுத்தி செல்வதாகவும் பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த இரட்டை கொலை தொடர்பில் 12 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற நிலையில், சம்பவத்தில் 21 பேர் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.