துயிலும் இல்லங்களின் துப்பரவு பணிகளை நிறுத்துமாறு பொலிஸ் கோரிக்கை


நவம்பர் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவுகூரப்படவுள்ள நிலையில் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்ய சென்றிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அத்துடன் இதன்போது பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், வாக்குமூலம் பெறுவதற்கும் முயற்சித்ததாக கூறப்படுகின்றது.

குறிப்பாக யாழ்.கோப்பாய் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுது.

இந்நிலையில் துப்பரவு பணிகளுக்கான முயற்சியை தொடர்ந்து தடை உத்தரவினை பெறுவதற்கு பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த துப்புரவு பணிகள் அவசர அவசரமாக இப்போது தேவையா? மாவீரர் நாளுக்கு நெருக்கமாக இதனை மேற்கொண்டிருக்க கூடாதா? என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக அரசாங்கத்திற்கு உசுப்பேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கிறார்களா எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை இவ் வருடம் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் ஊடாக தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், செஞ்சோலை படுகொலை நினைவேந்தலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அது தெரிந்திருந்தும் மாவீரர் நாளுக்கு 11 நாட்கள் உள்ள நிலையில் 27ம் திகதிக்கு நெருக்கமாக இந்த துப்புரவு பணிகளை மேற்கொண்டிருக்க கூடாதா? எனவும், பொலிஸாரை விழிப்படைய செய்துள்ளதால் வெறுமனே கோப்பாய், கனகபுரம் மட்டுமல்லாமல் வடகிழக்கு முழுவதும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு நீதிமன்ற தடைவிதிக்கப்படும் அபாயத்தை வெறும் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கி விட்டிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி விசுவமடுவில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடத்தாமல் யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மாவீரர்நாள் நினைவேந்தலையும் முற்றவெளியில் நடத்தும் நிலை வரப்போகிறதா? என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.