காட்டுயானை தாக்குதலால் 52 பேர் உயிரிழப்பு!


 இவ்வருடத்தின் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் காட்டு யானைகளின் தாக்குதலினால் 52 பேர் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு காரணங்களினால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுவரை 372 யானைகள் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் மாதம் ஒன்றுக்கு 700 காட்டு யானைகள் பிறக்கின்றன. அவற்றில் 150க்கும் அதிகமான காட்டு யானைகள் குறித்த வயதுக்கு முன்னரே உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு சுகாதார பிரச்சினைகளும் காரணமாக அமைகின்றன.

மேலும் 300க்கும் அதிகமான யானைகள் மனித செயற்பாட்டினால் உயிரிழக்கின்றன. துப்பாக்கிச்சூடு, மின்சார வேலி, போன்ற காரணங்களினாலும் யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக்கமைய இலங்கையில் 6 இலட்சத்து 100 காட்டு யானைகள் இருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.