29 மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்பு!
கடற்படையினர் கடந்த வாரத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புக்களின் ஊடாக 29 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களை கைப்பற்றியுள்ளனர். குறித்த காலப்பகுதியில் 100 கிலோ கேரள கஞ்சா மற்றும் 950 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பருத்தித்துறை, ஊரணி மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை