சுவிட்சர்லாந்தில் எகிறும் கொரோனா தொற்று வீதம்!


 சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று வீதம் பயங்கரமாக அதிகரித்துள்ளதையடுத்து, புதிய கொரோனா கட்டுப்பாடுகளை இன்று அரசு அறிவிக்க இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 6,000 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், 167 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 16 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில் தற்போதைய கொரோனா தொற்று வீதம் சுமார் 29 சதவிகிதம் ஆகும். நாட்டிலேயே வலாயிஸ் மாகாணம்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு கொரோனா தொற்று வீதம் 100,000 பேருக்கு 1,768 ஆக உள்ளது.

அதைத் தொடர்ந்து ஜெனீவாவில் கொரோனா தொற்று வீதம் 100,000 பேருக்கு 1,407 ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.