சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்!
புத்தளம் ஆனந்த மாவத்தையில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்திற்குரியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, வீதியோரம் உயிரிழந்திருந்தார்.
186 சி 01, புத்தளம் – குருநாகல் வீதியில் வசிக்கும் தர்மலிங்கம் வசந்தநாதன் (55) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
பின்னர் அவர் மதம் மாறி அப்துல் மாலிக் என பெயரை மாற்றிக் கொண்டார்.
அந்த நபர் ஹெட்டிபொலவில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அவர் தனது தனிமைப்படுத்தலை முடித்துவிட்டு 5 ஆம் திகதி வீடு திரும்பினார். இருப்பினும், அவர் வீட்டிற்கு செல்லவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் மீது கடைசியாக நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
அவரது சடலம் பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் பின்னர் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
கருத்துகள் இல்லை