இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி வழங்க WHO இணக்கம்!


 நாட்டில் 20 வீதமான மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க உலக சுகாதார அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக விசேட குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியை உபயோகிப்பது தொடர்பில் நேற்றைய தினம் சுகாதார அமைச்சில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று சுகாதார அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மற்றும் உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டாக்டர் ராஸியா பெண்டிசே ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.