நாட்டின் பல இடங்களில் சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பகுதிகளின் சில இடங்களில் 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடமேற்கு மாகாணத்தின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், நேற்றைய தினம் முல்லைதீவு மாவட்டத்தின் வெலிஓய பகுதியில் 287 மில்லிமீற்றரும்,அலம்பில் பகுதியில் 205 மில்லமீற்றரும், திருகோணமலை கோமரன்கடவல பகுதியில் 130 மில்லமீற்றரும், அனுராதபுர மாவட்டத்தின் கப்புகொல்லாவ பகுதியில் 111 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சியும் பதிவாகியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை