உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் பலருக்கு கொரோனா!


 ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக ஐரோப்பா, சுவிற்சர்லாந்து மற்றும் ஜெனீவா நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில்  உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்திலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த வாரத்தில் மட்டும் 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து  இதுவரை உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுமார் 65 ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன்  தொழில்நுட்பத் தலைவர் மரியா வான் கிர்கோவ் தெரிவித்தார்.

எனினும் இது ஒரு கொத்தணியா என்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எந்த தகவலும் வெளியிடவில்லை. 

அத்துடன் உலக சுகாதார அமைப்பு (WHO) அவசரகால நிபுணர் டாக்டர் மைக் ரியான், சுவிட்சர்லாந்தில் அதன் தலைமையகத்தைச் சுற்றியுள்ள பகுதி தற்போது விரைவான கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Blogger இயக்குவது.