2,950 பேர் 31 தனிமைப்படுத்தல் நிலையங்களில்!


 முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 31 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2 ஆயிரத்து 950 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் முதலாவது மற்றும் இரண்டாவது தொடர்பாளர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும்,

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கடந்த இரு நாட்கள் அதிகமானவர்களுக்குப் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Blogger இயக்குவது.