50 ஆயிரம் நன்னீர் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!


 அம்பாறை – திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டமான திலாப்பியா மீன் குஞ்சுகள் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மீன்குஞ்சுகள் பிரதேச செயலாளர் கஜேந்திரன் தலைமையில் கடந்த 24ம் திகதி விடப்பட்டது.

ரூபாய் 125,000.00 பெறுமதியான இந்த மீன்குஞ்சுகள் மட்டக்களப்பு மீனவர் கூட்டுறவு திணைக்களத்தின் பண்ணையில் 80 நாட்கள் வளர்க்கப்பட்டு சுமார் 2 தொடக்கம் 3 சென்டிமீட்டர் அளவு வளர்ச்சி அடைந்த நிலையில் இக்குளத்தில் விடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக கஞ்சிகுடிச்சாறு மீனவர் சங்கத்தின் 84 உறுப்பினர்கள், 5 மீன் வியாபாரிகள் நேரடியாகவும், 350 குடும்பங்கள், 5 மீன் வியாபாரிகள் மறைமுகமாகவும் பயனடையவுள்ளனர்.

அமெரிக்க அன்புநெறி அமைப்பின் நிதி உதவியில், IMHO USA and Pladge to Restore இணை மற்றும் Assist RR(SL) அனுசரனையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.