ராசிக்கற்களால் அதிஸ்டம் கிடைக்குமா?


 ராசிகற்கள் பதித்த ஆபரணங்களை அணிவதால் அதிர்ஸ்டம் உண்டாகுமா? வாழ்க்கை வளம்பெறுமா என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது. ஆனால் இந்துக்களை பொறுத்தமட்டில் இராசிக்கற்களை நம்புபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம்பாதவர்களும் முயற்சித்து பாருங்கள். உங்கள் பலனுக்கேற்ற கற்கள் பதித்த ஆபரணங்களை அணிவதால் உங்கள் வாழ்க்கையில் விருப்பங்கள் நிறைவேறி, வெற்றிகள் கிட்டும். வாழ்க்கையில் வளமும் மகிழ்வும் பெறுவதை உணர்வீர்கள் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

அப்படியாயின் அடிப்படையாக எந்த ராசிக்கரார்கள் எந்த வகையான கல் பதித்த ஆபரணத்தை அணியலாம்?

மேஷம்-பவளம் (coral)

ரிஷபம்- வைரம் (diamond)

மிதுனம்- மரகதம் (emerald)

கடகம்-முத்து (pearl)

சிம்மம்-மாணிக்கம் (ruby)

கன்னி-மகரதம் (emerald)

துலாம்- வைரம் (diamond)

விருச்சிகம்-பவளம் (coral)

தனுசு-கனக புஷ்பராகம் (topaz)

மகரம்-நீலக்கல் (blue sapphire)

கும்பம்-நீலக்கல் (blue sapphire)

மீனம்-கனக புஷ்பராகம் (topaz)

ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற பொதுவான ராசிக்கற்கள் இவை. இவற்றை வாங்கி அணிவதற்கு முன்னர் உங்கள் நாள் நட்ச்சத்திரத்தோடு பொருத்தி பார்க்க வேண்டியதும் அவசியம். எனவே உங்களுக்கு பரீட்சையமான நல்ல ஜோசியரை நாடி ஆலோசனை பெறுதல் நன்று. சிலவேளைகளில் நட்சத்திரம், பிறந்த நேரத்திற்கு ஏற்ப இந்த கற்களோடு வேறு கற்களும் சேர்த்து அணிவதால் பயன் அதிகமாக கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளது. சில வேளைகளில் உங்கள் பிறப்பு நேரம் நட்சத்திரத்துடன் பொருத்தி பார்க்கும் பொழுது யாராவது ஒரு சிலருக்கு கற்களின் நிறத்தை மாற்றி அணிதல் சிறப்பாக இருக்கும். எனவே இவை பொதுவாக ராசிக்குரிய கற்கள் என்ற போதிலும் உங்கள் பலனை ஜோசியரிடம் கேட்டறிந்து பயனடைந்து கொள்ளுதல் சிறப்பு என்கிறார்கள் ஜோசியர்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.