யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி ஒதுக்கப்படவில்லை!


 வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை தவராஜா கலையரசன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத திட்ட இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஒரு நிதியும் ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.. எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்திகள் இன்னும் கிடைக்கப் பெறாமல் இருப்பது மன வேதனையாக இருக்கின்றது. பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டிய விடயத்தை விடுத்து எங்களுடைய மக்களை தொடர்ந்தும் மாற்று இனமாக பார்க்கக்கூடிய ஒரு சூழலை இந்த நாட்டில் உருவாக்கக் கூடாது.

இந்த நாட்டிலே ஒற்றுமையை பலப்படுத்த கூடிய வகையிலே அந்த செற்பாடுகளை நாங்கள் முன்னெடுப்பதன் ஊடாகத்தான் ஒரு சிறந்த நாட்டை உருவாக்க முடியும் என்று கூறினார்.

உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியிருந்தார். திருக்கோவில், ஆலையடிவேம்பு போன்ற பிரதேசங்களில் அதிகமானவர்கள் பண்ணையாளர்களாகவே காணப்படுகின்றார்கள். அவர்களின் கால்நடைகளை மேய்ப்பதற்கு கூட மேய்ப்புத் தரை இல்லாத நிலை காணப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும.;

அண்மைக் காலத்தில் ஜனாதிபதியினால் ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தார். இருந்தும் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக 60,000 பேருக்கு உட்பட்டவர்களுக்கே அந்த தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்பட்டிருந்தாலும், தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்ட ஒரு விடயம்தான் இருந்து கொண்டிருந்தது. எனவே எமது உறவுகளுக்கு உதவிக்கரம் கொடுக்கக்கூடிய அடிப்படையில் எதிர்காலத்தில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.