யாழில் மழை, காற்றால் 297 பேர் பாதிப்பு!


 கடந்த 24 மணிநேரத்தில் கடும் மழை மற்றும் காற்றின் தாக்கத்தினால் யாழ். மாவட்டத்தில் 15 பிரதேச செயலார் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பிரிவுகளில் 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 80 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தினால் கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் 80 தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலுக்குச் செல்பவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கரையோரப் பகுதி மக்களை விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாகவும் எனினும், இதுவரையில் சூறாவளிப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.