ஒன்றரை மாதங்களில் 39 பேர் உயிரிழப்பு!


 கொரோனா இரண்டாவது அலை தொடங்கி ஒன்றரை மாதங்களில், நேற்று (13) 39வது மரணம் பதிவானது.

இரண்டாவது அலையில் ஏற்பட்ட கொரோனா மரணங்களில், அதிக எண்ணிக்கையிலான 25 பேர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகினர். இறந்தவர்களில் பெரும்பாலோர் 40-50 வயதுக்கு உட்பட்டவர்கள். அந்த வயதிற்குட்பட்ட பத்து பேர் மரணித்துள்ளனர்.

50-60 வயதுக்கு இடைப்பட்ட ஒன்பது பேர் மரணித்தனர். இரண்டு நாட்களில் தலா ஐந்து மரணங்கள் பதிவாகின.

21 ஆண்கள், 14 பெண்கள் மரணித்துள்ளனர்.

மார்ச் 11 ஆம் திகதி தொடங்கிய முதல் அலையில் 13 பேர் மரணித்தனர். ஒக்டோபர் 4 ஆம் திகதி தொடங்கிய இரண்டாவது அலையில் 39 பேர் மரணித்துள்ளனர்.

இலங்கையில் இதுவரை 52 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

Blogger இயக்குவது.