72 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!


 கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 72இலங்கையர்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை அரசின் சிறப்பு அனுமதியுடன் மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவில் இருந்து இவர்கள் வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்காக கொழும்பிலுள்ள ஆஸ்த்திரி, நவலோகா மற்றும் லங்கா தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பி.சி.ஆர்.பரிசோதனைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.