அமெரிக்க தேர்தல் முடிவுகள்- ஒரு பார்வை!!

 


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இம்முறை தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனும் போட்டியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இழுபறிநிலை காணப்பட்ட சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

வேட்பாளர் ஒருவிரின் வெற்றிக்கு 270 இடங்கள் தேவையென்ற நிலையில் தற்போது ஜோ பைடன் 248 இடங்களைக் கைப்பற்றி டொனால்ட் ட்ரம்பை விட மேலும் முன்னிலை பெற்றுள்ளார்.

இழுபறி நிலையில் இருந்த 10 பிரதிநிதித்துவத்தைக் கொண்ட விஸ்கொன்ஸின் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நெருங்கியுள்ளார்.

இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் இதுவரை வெளியான முடிவுகளின்படி 214 இடங்களைக் கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை, நெவாடா, மிச்சிக்கன், பென்சில்வேனியா, வட கரோலைனா, அலஸ்கா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இவற்றில் நெவாடா மற்றும் மிச்சிக்கள் மாநிலங்களில் பைடனும் பென்சில்வேனியா, வட கரோலைனா, அலஸ்கா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் ட்ரம்பும் முன்னிலையில் உள்ளனர்.

இதேவேளை, இதுவரையான முடிவுகளின் படி ஜோ பைடன் முன்னிலையில் இருந்தாலும் இன்னும் வெற்றியைத் தீர்மானிக்கும் முடிவுகள் வந்துசேரவில்லை. எனினும் இன்னும் சிலமணி நேரங்களில் முடிவு தெரிந்துவிடும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.