சிறைச்சாலைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா

 


நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது தற்போது 400 ஐயும் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெலிகட, போகம்பர, பூசா, மஹர மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளும், அதிகாரிகளுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்னர்.

தற்போது போகம்பர சிறைச்சாலையில் மொத்தம் 508 கைதிகள் உள்ள நிலையில் 204 கைதிகள் பி.சி.ஆர். சோதனைககு உட்படத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் 3,200 சிறைக் கைதிகள் தங்கியுள்ள பல்லேகலவில் அமைந்துள்ள புதிய சிறைச்சாலை வளாகத்திற்குள் வைரஸ் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருவதாக போகம்பர சிறைச்சாலை கண்காணிப்பாளர் எஸ்.பிரபஹார தெரிவித்தார்.

இந் நிலையில் நாட்டில் நேற்றைய தினம் சிறைச்சாலைகளில் 108 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 108 புதிய கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் அதிகாரிகள் என்றும் , ஏனையவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐந்து சிறைச்சாலைகளிலிருந்து கண்டறியப்பட்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் தினசரி பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே நோயாளிகள் பதிவாகியுள்ள சிறை வளாகத்திலும், சிறைச்சாலைகளிலும் வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேநேரம் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளுக்காக இதுவரை இரண்டு வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் அனைத்து சிறை ஊழியர்களுக்கும் விடுப்பு உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஊழியர்களும் இன்று (16) காலை 8 மணிக்குள் தங்கள் நிறுவனங்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.