கிராம சேவை உத்தியோகத்தரின் முகம் சுழிக்கும் செயல்!


யாழ்.பூநகரியில் பெண் ஓருவர் கிராம சேவை உத்தியோகத்தருடன் தகாத முறையில் இருந்த போது சிக்கியுள்ளார்.

பூநகரியில் கிராம சேவகர் அலுவலகம் ஒன்றில் அங்கு பணியாற்றும் கிராம சேவகர் ஒருவர், தான் பணி செய்யும் காரியாலயத்தில் பணி நேரம் முடிந்த பின் தன்னுடன் வேலைசெய்யும் சக பெண் உத்தியோகத்தரை அழைத்து வந்து காரியாலயத்தில் தகாத முறையில் ஈடுபடுவதை வழமையாக கொண்டு இருந்துள்ளார்.

இதனை அவதானித்த மக்கள் ஒரு சில தினங்களிற்கு முன்னர் கிராம சேவகர் பெண் ஒருவருடன் இருப்பதை அவதானித்து கிராம சேவகர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதன் போது இருவரும் நடத்தைப் பிறழ்வான கோலத்தில் இருக்கும்போது கையும் மெய்யுமாக பிடிபட்டனர்.

இதில் கிராம சேவகர் பெண் உத்தியோகத்தரை விட்டு தப்பி ஓடிவிட்டார். பெண் உத்தியோகத்தர் மக்களிடம் அகப்பட்டு தர்ம அடியும் வாங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை குறித்த பிரதேசம் முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது பலரும் வியக்கும் வகையில் மதிப்புடன் இருந்த நிலையில், மக்களை வழிநடத்தும் அரச அதிகாரிகளே இப்படி செயற்படுவது பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.