தொற்றாளியை அழைத்து வந்த இருவர் தனிமையில்!


யாழ்ப்பாணம் – நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த நபருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை தனிமை மையத்தில் இருந்து அழைத்து வந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தையில் இருந்து தனிமை மையத்துக்கு அனுப்பப்பட்டு, தொற்று உறுதியாகத நிலையில் குறித்த நபர் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற வாகனம் ஒன்றில் தனியாக அழைத்துவரப்பட்டுள்ளார்.

குறித்த வாகனத்தில் சாரதியும் மற்றொருவரும் பயணித்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த வந்த பின்னர் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்த நிலையில் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இருந்தபோதிலும் அழைத்துவரப்பட்டிருந்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை அழைத்துவந்த குறித்த இருவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Blogger இயக்குவது.