அல்வாய் குழு மோதலில் 10 பேர் காயம்!

 


வடமராட்சி – அல்வாய் பகுதியில் நேற்றிரவு (14) இரண்டு உள்ளூர் விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

மோதலில் காயமடைந்த 10 பேர் நேற்றிரவு 10 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், பலத்த காயமடைந்த சிலர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இரு விளையாட்டு கழகத்தினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இவ்வாறு மோதலில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Blogger இயக்குவது.