கோப்பாய் துயிலும் இல்ல சிரமதானத்தில் குழப்பம்!


 மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்கான சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் அப்பணி தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கேள்வி எழுப்பிய போது அங்கு சற்று குழப்ப நிலை ஏற்பட்டது.

இன்று (15) காலை சிரமதானப்பணிக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்பிகளான பொ.கஜேந்திரகுமார், செ.கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் சென்றிருந்தனர்

இதன்போதே அங்கு வந்த பொலிஸார் கடும் தொனியில் கேள்வி எழுப்பியதாகவும், தாம் தகுந்த விளக்கத்தை வழங்கியதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

Blogger இயக்குவது.