மனைவியை கொன்றவருக்கு மரண தண்டனை!

 


திருகோணமலை – ஆண்டாங்குளம் பகுதியில் மனைவியை பெற்றோல் ஊற்றி கொலை செய்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (18) தீர்ப்பளித்துள்ளார்.

38 வயதுடைய கெந்த கேவாகே அனுர இசாந்த என்ற நபருக்கே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018.02.14ம் திகதி கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த குலசேகர முதியன்சாலாகே ரேணுகா எனும் தனது மனைவியை காதலர் தினத்தன்று பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த குற்றத்திற்கெதிராக கெந்த கேவாகே அனுர இசாந்த என்ற எதிரிக்கு எதிராக சட்டமா அதிபரினால் 2019.04.12ம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டின் இலங்கை தண்டனை சட்டக்கோவை கொலை குற்றச்சாட்டின் கீழ் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணை நிறைவு பெற்ற நிலையில் குற்றம்சாட்ட நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில் அவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனைத் தீர்ப்பளித்துள்ளார்.

Blogger இயக்குவது.